திருகோணமலை சம்பூர் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டது என கூறும் போது, எப்படி ஆயுதப்படையினர் பாடசாலைக்குள் வந்தனர்?
அப்படி என்றால் சம்பூர் இன்னும் ஆயுதப்படையினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அண்மையில் சம்பூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு முதலமைச்சர், கடற்படை முகாம் தளபதி ஆகியோருக்கு இடையிலான நிர்வாக முரண்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சம்பூர் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டது எனக் கூறும் போது, எப்படி ஆயுதப்படையினர் பாடசாலைக்குள் வந்தனர்? அப்படி என்றால் சம்பூர் இன்னும் ஆயுதப்படையினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்று ஜெனிவாவில் அடுத்த அமர்வில் கேள்வி வருமே. அதனை எப்படி சமாளிப்பீர்கள்..? அமெரிக்கத் தூதுவர் கூடவே இருந்தாரே, எப்படி மறைப்பீர்கள்?
சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் என்று உத்தரவாதம் கொடுத்தீர்களே, இது எப்படி நடந்தது? அதுவும் சிறுபான்மைக்கான அதிகாரக் கையளிப்பின் அங்கமான கிழக்கு மாகாண சபை முதலமைச்சருக்கே எப்படி இப்படி நடக்க முடியும்?
அப்படி என்றால் மனித உரிமை ஆணையகத்தை, ஐ.நா சபையை, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகிறீர்களா? என்று கேள்விகள் அடுக்கடுக்காக அடுத்த ஜெனீவா அமர்வில் பாயாமல்இருக்க, இப்படியெல்லாம் சொல்லுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்.
எனினும் கடற்படை கிழக்குத் தளபதியின் இடமாற்றமும் அதற்கான நடவடிக்கைதான் என்று எங்களுக்குத் தெரியும். பரவாயில்லை, இதனை இத்தோடு விடுவோம். மறப்போம். மன்னிப்போம் என மேலும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment