தமிழினப்படுகொலைக்கு நீதிகோரும் செயல்முனைப்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களது
தோழமையினைத் திரட்டும் சந்திப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கியுள்ளதோடு, இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு நற்சான்றும் வழங்கியிருந்தது.
இந்நிலையில், நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தவறும் இலங்கையை அம்பலப்படுத்துவதிலும், பிரித்தானியாவுக்கு உள்ள கடப்பாட்டினை சுட்டிக்காட்டும் வகையிலும் இசந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், ஈஸ்தாம் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Stephen Timms , இல்வோட் பகுதி நடாளுமன்ற உறுப்பினர் Hon. Wesley Paul William ஆகியோரை சந்தித்த்து கலந்துரையாடியுளளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம், அவைத்தலைவர் நாகலிங்கம் பாலசந்திரன் மற்றும் அரசவை உறுப்பினர்கள், உறுதுணைக்குழு உறுப்பினர்கள் இச்சந்திப்புக்களில் பங்கெடுத்திருந்தனர்.
இதேவேளை இழந்த ஒவ்வொரு உயிர்களுக்கு ஒவ்வொரு மரம் எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான மரநடுகைத் திட்டத்தின் ஓர் அங்கமாக இழந்த உயிர்களை நினைவேந்தும் மரக்கன்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment