வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்த கஞ்சா செடிகளை வவுனியா பொலிசார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த பல நாட்களாக அப்பகுதியில் மக்களால் வளர்க்கப்பட்ட மாடுகள் சில காணாமல் போயிருந்தன.
இதனையடுத்து இது தொடர்பில் மாட்டு உரிமையாளர்களினால் பண்டாரிக்குளம் பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் எந்தபொரு தீர்வும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனை அடுத்து ஊர் மக்கள் மாட்டுத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டவரை விசாரணை செய்த குற்ற புலனாய்வு பிரிவின் உப பரிசோதகர் ரட்னாயக்க, சார்ஜன் ஜேசுதாஸ் தலமையிலான குழுவினர் சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த போது வீட்டின் படுக்கை அறையில் இருந்து 4-6 அடி உயரமுடைய கஞ்சா செடிகள் இரண்டு கைப்பற்றபட்டன.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment