May 22, 2016

தொழில் வழிகாட்டல் மட்டு மாவட்ட ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிகாட்டல் ஆசிரியர்களாகவும், வழிகாட்டல் ஆலோசகர்களாகவும் கடமையாற்றும் கல்வி அதிகாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது.

இந்தக் கருத்தரங்கு உலக தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடாத்தப்பட உள்ளது.
திறன் அபிவிருத்தி தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில் கல்வியினை வழங்கும் நிறுவனங்களின் அமைப்பான, மாவட்ட தொழில்நுட்ப, தொழில் பயிற்சி ஒருங்கிணைப்பு அமைப்பினால் நடாத்தப்பட உள்ளதாக குறித்த அமைப்பின் தவிசாளரும், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபருமான ரி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களையும், க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களையும், உயர்தரத்தில் பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களையும் தொழில் நுட்பக் கல்வியில் இணைத்துக் கொள்ளும் செயல்பாடாக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 45 ஆசிரியர்களும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து 22 ஆசிரியர்களும், மட்டு.மேற்கு கல்வி வலயத்தில் இருந்து 33 ஆசிரியர்களும், கல்குடா கல்வி வலயத்தில் இருந்து 12 ஆசிரியர்களும் மற்றும் மட்டு.மத்திய கல்வி வலயத்தில் இருந்து 46 ஆசிரியர்களுமாக 158 ஆசிரியர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக ரி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment