May 28, 2016

தமிழ்மாறன் மற்றும் லலித் ஜெயசிங்க விரைவில் கைதாகலாம்..?


சட்டவிரிவுரையாளர் வி.ரி தமிழ்மாறன் மற்றும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ஜெயசிங்க ஆகிய இருவரும் கைதாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தினில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ்குமாரை தப்பிக்க வைத்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் இருவரும் எந்நேரமும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வித்தியா கொலை சம்பவம் இடம்பெற்ற போது யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ஜெயசிங்க கடமையினிலிருந்திருந்தார். அவர் சட்டவிரிவுரையாளர் வி.ரி தமிழ்மாறனின் மாணவரென சொல்லப்படுகின்றது.

சந்தேகத்தில் பொதுமக்களால் கைது செய்யப்பட்டிருந்த சுவிஸ்குமாரை காவல்துறை வசம் ஒப்படைப்பதாக அழைத்து சென்றிருந்த சட்டவிரிவுரையாளர் வி.ரி தமிழ்மாறன் தனது மாணவனான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ஜெயசிங்கவிற்கு வழங்கிய அறிவுறுத்தலையடுத்தே நாட்டை விட்டு தப்பித்து செல்ல சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மீண்டும் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைதான சுவிஸ்குமார் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவினையடுத்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்தே சட்டவிரிவுரையாளர் வி.ரி தமிழ்மாறன் மற்றும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ஜெயசிங்க ஆகிய இருவரும் கைதாகவுள்ளனர்.

No comments:

Post a Comment