August 23, 2015

சர்வதேச யுத்தகுற்ற விசாரணையை கோரும் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தேசிய பட்டியலில் ஆசனம் கொடுக்க மறுக்கும் இலங்கை தமிழரசு கட்சி!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரம் இன்றும் உறுதி  செய்யப்படாமல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலைந்துள்ளது.இன்றைய கூட்டம் ஆரம்பித்தது முதல்
, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிற்கு ஆசனம் வழங்கப்பட வேண்டுமென சிவசக்தி ஆனந்தன் தலைமையிலான அணியினர் கடமையாக வலியுறுத்தினார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரனிற்கு ஆசனம் வழங்கப்படுவதன் மூலம், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையில் சமத்துவத்தை பேணலாம், கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார், அவருக்கு ஆசனம் வழங்குவது முறையானதென புளொட் அமைப்பும் வலியுறுத்தியது.
எனினும், ரெலோ இதற்கு மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவிக்கவில்லை.ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியினர், சுரேஷின் ஆசனத்தை நிராகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யாழ் மாவட்டத்திற்கு அதிக ஆசனம் செல்கிறது, விருப்பு வாக்கு குறைவாக எடுத்துள்ளார் போன்ற காரணங்களை கூறினார்கள். எனினும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினர் சுரேஷின் நியமனத்தில் விடாப்பிடியாக நின்றனர்.இதனையடுத்து, ரெலோ கட்சி தமக்கு காலஅவகாசம் தேவையென கோரிக்கை விடுத்தனர். சுரேஷின் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடி நாளை முடிவு சொல்வதாக கூறினார்கள். இதனையடுத்து, இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றை பெண் பிரதிநிதித்துவத்திற்கு ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டது.  முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளரான   சாந்தி சிறிஸ்கந்தராஜாவிற்கு வழங்கலாமென முடிவு செய்யப்பட்டது. எனினும், இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. சில சமயங்களில் நானை சுரேஷ் தேர்வு செய்யப்பட்டால், மற்றைய தேர்வு வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படும் சாத்தியங்களும் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச யுத்தகுற்ற விசாரணையை கோரும் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தேசிய பட்டியலில் ஆசனம் கொடுக்க மறுக்கும் இலங்கை தமிழரசு கட்சி  உறுப்பினரான சிறீதரன் சுமந்திரன் ஆகியோராகும் .

No comments:

Post a Comment