August 29, 2015

தமிழர்களின் கோரிக்கையை மழுங்கடிக்கவே மீள்குடியேற்ற நிதியுதவி! ஜே.டி.எஸ் கண்டனம்!

போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் வகையிலேயே ஐ.நா. வின் மீள்குடியேற்ற நிதி அமைந்துள்ளதாக ஜே.டி.எஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஊடகவியலாளர் அமைப்பு எனும் ஜேடிஎஸ் அமைப்பு இது தொடர்பாக கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் சாராம்சம் கீழ் வருமாறு அமைந்துள்ளது.
இலங்கை அரசின் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றார்கள்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றத்துடன், சர்வதேச விசாரணை என்ற விடயம் பின்தள்ளப்பட்டு, உள்ளக விசாரணை என்ற புதிய விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மறுபுறுத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கென்று மூன்று மில்லியன் டொலர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வழங்கப்படவுள்ளது.
உண்மையில் இது தமிழ் மக்களின் சர்வதேச விசாரணை தொடர்பான விடயத்தை திசை திருப்பும் நோக்கில் வழங்கப்படும் நிதியுதவியே தவிர வேறில்லை. அந்த வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்குப் பதில் அவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஐ.நா.வும். ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என்றும் அந்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment