August 29, 2015

வரலாற்று சிறப்புமிக்க சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில் தீர்த்தோற்சவம்(படங்கள் இணைப்பு)

வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இறுதி நாள் தீர்த்த திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.
தீர்த்த திருவிழா இன்று காலை 10.00 மணிக்கு உதயன்மூலை சரவணப்பொய்கை தீர்த்தக்குளத்தில் நடைபெற்றது.
தீர்தோற்சவத்திற்காக முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சித்தாண்டி பிரதான வீதியுடாக வருகைதந்ததும் சுபவேளையில் ப்ரம்மோற்சவ பிரதம குரு தருமை ஆகமப்பிரவீனா, ஆசீர்வாதசரபம் சிவஸ்ரீ.கைலாசநாத வாமதேவக் குருக்கள் (யாழ் - நயினை ஸ்ரீ நாகபூசணியம்மன் பேராலய ஆதீனகுரு) மற்றும் ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ.க.குகன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற முருகப்பெருமானின் தீர்த்தோற்சவத்திற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்ததுடன் நூற்றுக்கு மேற்பட்ட பொங்கல் பானை வைத்து தங்களின் நேர்த்திக்கடன்களை செய்தனர்.
தீர்தோற்சவத்தினை முன்னிட்டு வருகின்ற அடியவர்களுக்காக வீதியெங்கும் தாக சாந்தி நிலையம் மற்றும் அன்னதான சபை என்பனவற்றின் ஊடாக பக்தர்களுக்கு பானங்கள் உணவு என்பன வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்திக் பெருவிழாவானது பதினாறு நாட்களை கொண்டமைந்த திருவிழாவின் இறுதி நாளாகிய இன்று கொடி இறக்கத்துடன் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment