2006.08.14 ஆம் திகதி அதிகாலை ஏனைய பள்ளி மாணவர்கள் உட்பட 350 மாணவர்களுக்கு மேல் செஞ்சோலையில் முதலுதவி பயிற்சிக்காக் காத்திருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நான்கு போர் விமானங்கள் 16 குண்டுகளை வீசி கொன்ற 61 பள்ளி மாணவர்களின் படுகொலை – திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. 150 மாணவர்களுக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளார்கள். இந்த கொடூரம் மனதை உருக்க கூடியதாகும்.
எண்ணற்ற கனவுகளுடன் பரீட்சைக்காக காத்திருந்த எம் இன மொட்டுக்களை கிள்ளி எறிந்து எரித்த சிங்கள இனவெறி அரசு இன அழிப்பு அவர்களுடைய தேசியக் கொள்கையாக இருப்பதை அடையாளம் காட்டியது. வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள்… அறிஞர்கள் என எமக்குக் கிடைக்க இருந்த அருமலர்கள் எத்தனை எத்தனை ??? இனி மீள்வார்களோ அவர்கள் ????
2015.08.14 அன்று கொல்லப்பட்ட மாணவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் . கொல்லப்பட்ட மாணவர்களை நினைவு கூர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 15 ம் திகதி நினைவு கூட்டம் நடாத்த இருக்கின்றோம்.
தயவு செய்து பாடசாலை மாணவர்களுடன் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய பங்களிப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
நன்றி
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயரிய நோக்குகளையும் இலக்குகளையும் மாணவசமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிந்துணர்வை வளர்த்து மாணவரிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரிய சமூகம் முயற்சிக்க வேண்டும். – தமிழீழ தேசியத்தலைவர்-
குறிப்பு : இக் கடிதம் செஞ்சோலை குண்டு வீச்சில் விழுப்புண் அடைந்து உயிர்தப்பிய ஒரு மாணவியால் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டது.

No comments:
Post a Comment