August 23, 2015

இலங்கைக்கான தொழில் வீசாவை இத்தாலி தற்காலிகமாக இடைநிறுத்தியது

இலங்கையர்களுக்கான தொழில் விசாக்களை இத்தாலிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இத்தாலி தொழில விசாக்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முறைகேடு தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
70 வீசாக்கள் வழங்கப்பட்ட நிலையில் அதில் 40 வீசாக்களுக்காக உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
இவை கறுப்புச்சந்தையில் அதிகமான விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
வீசாக்கள் வழங்கப்பட்ட பின்னர் இத்தாலிய தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட நேர்முக தேர்வின் போது பலருக்கு உரிய கல்வித்தகமைகள் உட்பட்ட விடயங்கள் இருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேர்முக தேர்வின்போது சிலர், தம்மிடம் தொழிலுக்கு செல்லும் முன்னர் 1500 யூரோக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டதாக தெரிவித்திருந்தனர்
எனினும் இந்த வீசாக்கள் அனைத்தும் பணக்கொடுப்பனவு இல்லாமலேயே இலங்கைக்கு வழங்கப்பட்டவை என்பதை இத்தாலிய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment