August 14, 2015

தமிழீழ மண்ணின் கண்ணீர் அவலம்.அன்று உங்களுக்காக களாமாடியவரின் பிள்ளைகள்இன்று கண்ணீர் வெள்ளத்தில் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் – (இயக்கப் பெயர் கெங்கா) அண்மையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டமை
யாவரும் அறிந்ததே.விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகாலமாக போராளியாக இருந்த இவர் 2009ம் ஆண்டு ஆயுத மெளனிப்புக்குப் பின்னிட்ட நாட்களில் இலங்கை இராணுவத்தால் பிடிபட்டு 2/12 ஆண்டுகளின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
அவரது தலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டிக்கு சிகிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற போதிய பணவசதி இல்லாமையாலும் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்திருந்தார்.மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இக் குடும்பம் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றிய நிலையில் வாடுகின்றனர்.அப்பா இறந்துவிட்டார் என்பது கூட தெரியாத 7 வயது நிரம்பிய மூத்தமகள் அப்பா எல்லாம் எனக்கு வாங்கித் தருவார் எனக்கூறி மகிழும் பிஞ்சு உள்ளத்திடம் எப்படி கூற முடியும் அப்பா இறந்துவிட்டார் மீளெழ மாட்டார் என….!
3 பிள்ளைகளோடு என்னையும் தவிக்கவிட்டு எதற்காக இந்த முடிவெடுத்தீர்கள் என மனைவி அழுது புலம்புகையில் அழாத கண்களும் ஒருகணம் அழுதே தீரும்.
தற்போது கணவனையுமிழந்து 3 பெண்பிள்ளைகளோடு தவிக்கும் இக்குடும்பத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க லங்காசிறி குழுமம் 50000/= ( ஐம்பதாயிரம் ) ரூபாய்க்களை வழங்கியுள்ளது.உதவி செய்ய நினைக்கும் நல்லுறவுகளே இவர்களையும் சற்று திரும்பி பாருங்கள். அன்று உங்களுக்காக போராடியவரின் இன்றைய நிலையை பாருங்கள். இது தமிழீழ மண்ணின் கண்ணீர் அவலம்.அன்று உங்களுக்காக களாமாடியவரின் பிள்ளைகள்இன்று கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள்
எனவே நல்லுங்களே! நீங்களும் உங்கள் உதவித் தொகைகளை புதுக்குடியிருப்பு அருட்தந்தை அருட்செல்வன் அவர்களுக்கூடாக அனுப்பி வையுங்கள். ஏங்கித் தவிக்கும் அக்குடும்பத்தின் கண்ணீரை துடையுங்கள்.
Rev S.A. Arudchelvan
A/c No. 0160 2026 8471
HNB Jaffna Branch
0094 77 130 45 16
க.புஸ்பரபஜா 0094 77 331 35 71
puthukudiyiruppu_01poralie

No comments:

Post a Comment