August 14, 2015

யாழ் பொலிகண்டி பகுதியில் போதைப் பொருள் மீட்பு 29 வயதான இளைஞர் கைது !

யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை – பொலிகண்டி பகுதியில் மேலும் ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

29 வயதான இளைஞர் ஒருவரை சோதிக்கும் போது அவரிடம் இருந்து 10 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.கடந்த வாரமும் இந்த பகுதியில் 30 கிலோ போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment