August 14, 2015

ஒட்டுக்குழு புளொட் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் அனந்தி சசிதரன்!

இறுதியுத்த கணம் வரையினில்; விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும்
நடவடிக்கையில் இன்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின்    இறங்கி உள்ளார்.
இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள்  பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட  மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது.
இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அனந்தி இதனை செய்த சித்தார்த்தனிற்கும் அவரது ஆட்களிற்கும் குரல் கொடுப்பதே ஆதரவாளர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.



No comments:

Post a Comment