August 24, 2015

ஈ.பி.டி.பியின் கட்சிப்பத்திரிகையான தினமுரசு நாளிதழிற்கு மூடுவிழா!

நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்ததை அடுத்து ஏற்பட்டுள்ள குழப்ப நிலையின் தொடர்ச்சியாக ஈ.பி.டி.பியின் கட்சிப்பத்திரிகையான தினமுரசு பத்திரிகை நிறுவனம் இழுந்து மூடப்பட்டுள்ளது.


பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியங்கள் வழங்கப்படாமல் நிறுவனம் மூடப்பட்டதால் பணியாளர்கள் போராட முற்பட்டுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தலில் 3 ஆசனங்களை ஈபிடிபி கைப்பற்றியிருந்தது. இவற்றில் அதிக விருப்பு வாக்கினை டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில்  தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கட்சி ஒரு ஆசனத்தினை மட்டுமே பெற்றுக் கொண்டது. இந்த தோல்விக்கு கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள்தான் காரணம் எனக்குற்றஞ்சாட்டி கட்சியின் பத்திரிகையான தினமுரசு நாளிதளை நிறுத்தி அலுவலகத்தினை மூடுமாறு டகளஸ் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் அவ்வலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தமக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படவில்லை. அது வழங்கப்பட்டால் மட்டுமே தாம் விலகிச் செல்வோம் என்றும், இல்லாவிட்டால்; தொழில் திணைக்களம், மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வோம் என்றும் நிறுவனத்தன் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment