August 27, 2015

சர்வதேச விசாரணையென்பதே வடமாகாணசபை முடிவு!

சர்வதேச பொறிமுறையின் கீழான  உள்ளக விசாரணைக்கு சம்பந்தன் - சுமந்திரன் தரப்பு தூபம் போட்டுவரும் நிலையில் போர் குற்றங்கள், மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை தான் என்று சொல்லி வருகின்ற நிலையில் அது பற்றி எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அவ்வாறு சொல்வது அவர்களுடைய நிலைப்பாடாக இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு தெளிவானது. போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை சார்ந்த தனித்துவமான சர்வதேச விசாரணையை நாங்கள் கேட்டுநிக்கிறோம் அதில் எந்தவிதமாற்றமும் கிடையாது.
இனப்பிரச்சனைக்கு சமஸ்டி முறையிலான தீர்வை காண்பதற்கு சர்வதேசத்தோடு இணைந்து ஜப்பானிய அரசாங்கம் உதவ வேண்டும். சர்வதேசத்தோடு இணைந்தது இலங்கை அரசாங்கத்துக்கு இனப்பிரச்சனை தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் யப்பானை கேட்டுககொண்டதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment