August 15, 2015

இந்தியாவின் கொல்கொத்தாவில் 6 புலி உறுப்பினர்கள் கைது என இந்திய ஊடகங்கள் !

கொல்கொட்டாவில் ஆறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினம் நடைபெறவுள்ள நிலையில் ஆறு பேரும் கொல்கொட்டாவிற்கு எதற்காக சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
குணசேகரன் மற்றும் பாலசிங்கம் ஆகிய இருவரும் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏதேனும் நாச வேலைகளில் ஈடுபடவா அல்லது புலிச் செயற்பாடுகளை மீள ஒருங்கிணையச் செய்யவா இவ்வாறு கொல்கொட்டா சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment