வரணியில் ஐந்து மாணவிகளுடன் பாடசாலைக்குள் வைத்து அங்கசேஷ்டையில் ஈடுபட்ட ஆசிரிய ஆசாமிக்காக சட்டத்தரணி சிறிகாந்தா ஆஜராகியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட சமயத்தில் அஜரான சிறிகாந்தா, ஆசாமி மிக நல்லவர். அப்படியான வேலைகளில் ஈடுபட மாட்டார். அவரை பிணையில் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்தார். எனினும், நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது.
கடந்த மாதம் 24ம் திகதி சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றின் அடிப்படையில், கொடிகாமம் பொலிசார் வரணியிலுள்ள பாடசாலை மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பாடசாலை ஆசிரியரான 45 வயது ஆசாமி ஒருவரின் சில்மிசங்கள் அம்பலமானது. ஆசாமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப்பட்ட சமயத்தில், ஆசாமியை பிணையில் விடுவிக்க பொலிசார் ஆட்சேபம் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவரிடமும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசாமியின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment