June 5, 2015

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று வழிபாட்டுக்கு ஒருநாள் மட்டும் அனுமதி!

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை நடத்த பலாலி பாதுகாப்புப் படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது.  

 மேலும்  வைகாசி  விசாக தினத்தை முன்னிட்டு  பொதுமக்கள் ஞானவைரவர் ஆலயத்தில் இன்று  காலை 8 மணிக்கு பொங்கல் பொங்கி மடை பரவி தமது  வழிபாடுகளை நிறைவேற்றினர்.   மேற்படி பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு கடந்த 25 வருடங்களாக இந்த ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.   இந்த நிலையில் இவ்வாண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

புதிய அரசு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை விடுவிக்கப்போவதாக அறிவித்திருந்த போதும் வெறும் ஆயிரம் ஏக்கருடன் அது ஓய்ந்து போயுள்ளது.இந்நிலையினில் தமது ஆலயங்களினில் வழிபட உரிமை கேட்டும் அவர்கள் போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment