May 6, 2015

இந்தோனேசியாவில் ஆணும் பெண்ணும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் செல்ல தடை!


பாவச் செயல்களுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக திருமணமாகாத ஆண்களும் பெண்களும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு இந்தோனேசியாவின் அஷேயிலுள்ள மாவட்டமொன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமையன்று சட்டமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

ஒரு வருடத்தின் பின்னர் அமுலுக்கு வரவிருக்கும் பழமை பேணும் மாகாணத்தின் இப் புதிய இஸ்லாமிய ஒழுங்கு விதிக்கு வடக்கு அஷே மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கினர்
ஷரீஆ சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுத்துவருவதாக சட்டமன்ற உறுப்பினரான பௌசுல் ஹம்ஸா தெரிவித்தார்.
திருமணமாகாதேர் நெருக்கமாக அமர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்வது பாவச் செயல்களுக்கு இட்டுச்செல்லக்கூடியது என்பதால் இது தெளிவாக ஷரீஆ சட்டத்திற்கு எதிரானதாகும் என ஏ.எப்.பி செய்தித் தாபனத்திற்கு ஹம்ஸா தெரிவித்தார்.
நெருக்கமான சனத்தொகையைக் கொண்ட முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டின் சுமாத்ரா தீவின் வடமுனையில் அமைந்துள்ள அஷே மாகாணமே இஸ்லாமிய சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்துள்ள ஓரேயொரு மாகாணமாகும். ஆண் தன்னினச்சேர்க்கை, சூதாட்டம் மற்றும் மதுபானம் அருந்துதல் என்பன அங்கு பிரம்படித் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
ஜகார்த்தாவிலுள்ள மத்திய அரசாங்கம் நீண்டகால பிரிவினைவாத போராட்டத்தனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக 2001ஆம் ஆண்டு விசேட சுயாட்சி வழங்கியதைத் தொடர்ந்தே இந்த மாகாணம் ஷரீஆ சட்டத்தினை அமுல்படுத்த ஆரம்பித்தது.
மோட்டார் சைக்கிளில் பகிர்வுப் பயணம் மேற்கொள்வதற்காக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு அஷேயிலுள்ள நகரமொன்றில் மோட்டார் சைக்களில் பெண்கள் இருபக்கமாகவும் கால்களை வைத்தது அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் பக்கவாட்டில் பெருத்தும் ஆசனத்திலேயே (side-saddle) பயணிக்க வேண்டும்.
நேரடி இசைக் கச்சேரிகளுக்கும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளில் ஆண் மற்றும் பெண் என மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளமையும் செவ்வாய்கிழமையன்று வடக்கு அஷேயில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய உப சட்டத்தின் முக்கியமான விடயங்களாகும். இப் புதிய சட்டங்கள் ஒரு வருட சலுகைக் காலத்தின் பின்னர் 2016 மே மாதம் அமுலுக்கு வரும்.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக அமர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்லும்போது பிடிக்கப்பட்டால் எவ்வகையான தண்டனை வழங்கப்படும் என்பதை ஹம்ஸா தெரிவிக்கவில்லை.
புதிய இஸ்லாமி சட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்படும் பல தண்டனைகளை அவர் வரிசைப்படுத்தினார்.
அவை எச்சரிக்கை முதற்கொண்டு தண்டப்பணம் மற்றும் அவர்களில் கிராமத்திலிருந்து வெளியேற்றுதல் வரையாக காணப்பட்டது.
வடக்கு அஷே மாவட்டத்திலிருந்து பாவ காரியங்களுக்கு இட்டுச்செல்லும் அனைத்து செயற்பாடுகiயும் படிப்படியாக இல்லாதொழிப்பதற்கு நாம் முயற்சிப்போம். என அவர் சுட்டிக்காட்டினார்.
அஷேயிலுள்ள மாகாண பாராளுமன்றமும் மாவட்டப் பாராளுமன்றங்களும் தமக்குரிய இஸ்லாமிய உப விதிகளை அங்கீகரித்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment