யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணிகள் சொகுசு பேரூந்து சேவை நடாத்தும் ஈஸ்வரன் பேருந்து சேவையில் பயணித்த பயணியின் பொருட்கள் அடங்கிய பிரயாணப் பொதி அப் பேரூந்தில் வைக்கப்பட்டிந்த போது
திருடப்பட்டுள்ளது. குறித்த பிரயாணப் பொதி உட்பட பயணிகளின் பிரயாணப் பொதிகள் பேரூந்தின் கீழ்ப் பகுதியில் வைக்கப்பட்டு அது மூடப்பட்ட பின்னரே பேரூந்து புறப்படுவது வழக்கமாகும். இந்தப் பேரூந்தின் சாரதியும் நடத்துனருமே குறித்த பொருட்களுக்கு பொறுப்பானவர்களாகும். பயணிகளை கீழே இறக்கும் போது அவர்களே மூடப்பட்டிருக்கும் பொருட்களை எடுத்து பயணிகளிடம் கொடுக்கின்றனர்.
இந் நிலையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயணி ஒருவரின் பெறுமதி மிக்க பிரயாணப் பொதி அந்தப் பேரூந்தில் களவாடப்பட்டது எப்படி? இதனால் குறித்த பயணி களவாடப்பட்ட பொதி தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிசாரிடம் முறையிடச் சென்றுள்ளார். அப்போது அங்கு முறைப்பாட்டைப் பதிய வேண்டிய பொலிசார் ”குறித்த பேரூந்து முக்கிய பிரமுகருடைய பேரூந்தே’ என கூறி முறைப்பாட்டைப் பதிய தயங்கினராம். பின்னர் பயணி கொடுத்த அழுத்தத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
பொலிசில் முறையிட்ட பின்னர் பேரூந்தின் முதலாளி பயணியின் தொலைபேசிக்கு கெட்ட வார்த்தைகளால் ஏசியுள்ளார். அத்துடன் அச்சுறுத்தியதாகவும் பயணி தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கு சொகுசு சேவை நடாத்தும் இவ்வாறான பேரூந்து நிறுவனங்களும், முதலாளிகளும் பயணிகளைக் கடவுளாக மதிக்க வேண்டு்ம். ஏனெனில் அவர்கள் இல்லாதுவிடில் இவர்களுக்கான உழைப்பு இல்லாது போய்விடும். அதை விடுத்து தங்களைக் கடவுளாகவும் பயணிகளை கேவலமானவர்களாகவும் கருதினால் குறித்த பேரூந்துச் சேவைகளை பயணிகள் புறக்கணித்து மாற்று வழிகளில் பயணமாவதைத் தடுக்க முடியாது போய்விடும்.
இவ்வாறானர்களின் நடவடிக்கையால் பயணிகள் ஏனைய சேவைகளையும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைக்கு உள்ளாகிவிடுவர்.
இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment