யாழ்ப்பாணம் நல்லூர் கச்சேரி வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் புகைப்படத்துடனான வீதி அபிவிருத்தி விளம்பர பலகை மீது இன்று கழிவு ஒயில் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை மேற்குறித்த வீதியில் அமையப்பெற்றுள்ள இவ்விளம்பரப்பலகை மீது பை ஒன்றில் எடுத்துவரப்பட்ட ஒயில் இவ்வாறு வீசப்பட்டுள்ளதுடன் வீதியில் பரவலாக ஒயில் சிந்திக்காணப்படுகின்றதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
No comments:
Post a Comment