இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ஹனீப் வாசீம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்டபோது பலியானதாக உளவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஹனீப் வாசீம் (25) 2014ஆம் ஆண்டு நவம்பரில் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். பின்னர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்டுள்ளார்.
இதில் கடந்த மார்ச் 15ஆம் தேதி உயிரிழந்தார் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
அடிலாபாத்தில் உள்ள சாதான் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்துள்ள வாசீம், கடந்த பிப்ரவரி மாதம் தனது சகோதரியின் திருமணத்திற்கு கடைசியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, காரிம்நகரை சேர்ந்த மற்றொரு வாலிபரை அவர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அவரை தேடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் இருந்து பெரும்பாலான இந்திய வாலிபர்கள், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபுஅக்பர் அல் பகாதியின் பேச்சைக் கேட்டு, தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்தனர் என்பதும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment