May 30, 2015

முள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு இந்திய கங்கைக்கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றம்!

கடந்த 18ம் நாள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக, இந்துக்களின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான இந்தியா காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகில் கங்கைக்கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 18ம் நாள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக
உலகமெலாம் வாழும் தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தியிருந்தனர்.
இந்த நாளில் உலகமெலாம் வாழும் இந்துக்களின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான இந்தியா காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகில் கங்கைக்கரையில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்களின் ஒன்றியத் தலைவர் கோபாலகிருஸ்ணனின் வழி நடத்தலில் பிதிர்க்கடன் கிரியைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கிரியைகள் பூனம்பட்டி ஆதீனம் (புதுடெல்லி) தலைமையில் அந்தணர் பெருமக்களால் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த பிதிர்கடன் கிரியைகளில் இலங்கையில் இருந்து பா.உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன், முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் செந்தூரன், இந்தியா தமிழ் நாடு இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத், இலண்டனில் இருந்து பிரித்தானிய சைவக் கோவில்களின் ஒன்றியம் சார்பாக இரட்ணராஜா குழுவினரும், இந்திய பொதுமக்களும் கலந்துகொண்டு பிரார்த்தித்ததுடன் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் துறவிகளுக்கும் அந்தணர்கள் பொதுமக்களுக்கும் தானங்களும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment