May 17, 2015

தமிழின அழிப்பு நாள் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்க யேர்மனியில் நடைபெறும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் (படங்கள் இணைப்பு)

மண்ணுக்காக தங்கள் உயிர்களை அர்பணித்த மாவீரர்களுக்கும் பௌத்த சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமையப்பெறும் நினைவுத்தூபிக்கு சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு கலந்துகொண்ட மக்களால்
நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்களின் முள்ளிவாய்கால் படுகொலையின் வலியை தாங்கிய கவிதைகளும் இடம்பெற்றன .
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மனியில் நேற்றைய தினம் மாவீரர் தூபி வளாகத்தில் இருந்து நீதிக்கான நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது . இப் பயணத்தை ஐந்து தமிழின உணர்வாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர் .நடைபயணத்தை ஆரம்பிக்கும் முன் தமிழீழ
தமிழர் மீதான சிறிலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீன சர்வதேச விசாரணை, தமிழீத்தில் உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.
நேற்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணம் 7 km தூரத்தை கடந்து Mühlheim எனும் நகரத்தின் மத்தியில் நிறைவுபெற்றது . அத்தோடு செல்லும் பாதையில் வேற்றின மக்களிடத்தில் எமக்கு நடந்த மற்றும் நடக்கின்ற இன அழிப்புக்கு நீதி கோரும் வகையில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .
இன்று(17.05.2015) காலை 10 மணிக்கு Ratingen எனும் நகரத்தை நோக்கி நடைப்பயணம் தொடர்ந்து செல்ல இருக்கிறது . யேர்மன் வாழ் தமிழர்கள் அனைவரும் நடைபெற இருக்கும் தமிழின அழிப்பு நாள் பேரணியில் மே 18 அன்று அணிதிரண்டு, சர்வதேச சுயாதீன விசாரணை எனும் ஒற்றைக் கோரிக்கையை, ஒன்றுபட்ட குரலாக அனைவரும் ஒங்கி ஒலிப்போம் என, இந்த நடைப்பயணம் அறைகூவல் விடுத்து நிற்கின்றது.
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி








No comments:

Post a Comment