May 19, 2015

அன்று கிரிசாந்தி, நேற்று சரண்யா, இன்று வித்தியா, நாளை யார்? - யாழ். பாடசாலை சமூகம் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


அனியாயமான முறையில் உயிர் பறிக்கப்பட்ட மாணவிக்கு நியாயமான முறையில் நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ் சிறைச்சாலை முன்பாக இன்று காலை 8.30 மணியிலிருந்து யாழ். பாடசாலைச் சமூகங்கள் திரண்டெழுந்து அமைதியான முறையில் இரண்டு மணிநேரம் மேற்கொண்டனர்.



சென்ஜோம்ஸ் மகளிர் பாடசாலை, சாள்ஸ் மகா வித்தியாலயம், அடைக்கலமாதா மகா வித்தியாலயம், திருக்குடும்பக் கன்னியர் மடம் பாடசாலையை சேர்ந்த மாணவர்களே பஸ்ரியன் சந்தியிலிருந்து ஏ- 9 வீதியின் இரு மருங்கிலும் கூடி நின்று படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ வித்தியா முற்றுப்புள்ளியா தொடர்கதையா – பெண்மைக்கு பாதுகாப்பில்லா தேசம் பெய் தேசம் – சகோதரியின் அழுகுரல் கேட்கவில்லையா – பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு குரல்கொடுப்போம் ” போன்ற பதாதைகளை தாங்கியும் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உருவப்படம் தாங்கியும் மெளனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவி கருத்துத் தெரிவிக்கையில்,
பெண்கள் சடப் பொருட்களா? நிம்மதியாக நடமாடமுடியாத நிலை இனி வேண்டாம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். எங்கள் பாது காப்புக்கு சமூகம்தான் பொறுப்புக் கூற வேண்டும். அரபு நாடுகளில் கொடுக்கப்பபடுகின்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான தண்டனைகள் போல் எமது நாட்டிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்








DSCN2015DSCN2010

No comments:

Post a Comment