May 18, 2015

மட்டக்களப்பில் புலனாய்வாளர்களின் அழுத்தங்களுக்கும் மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் படைப்புலனாய்வாளர்களின் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் முள்ளியவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுகூறும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் 4.00மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளாவட்டவானில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கே.கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த கே.செல்வேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு நினைவஞ்சலி செய்யும் வகையில் ஒளியேற்றப்பட்டது. அத்துடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மா சந்திவேண்டி மௌன இறைவணக்கமும் இதன்போது செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரைகள் அதிதிகளினால் நிகழ்த்தப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வில் பொதுமக்களை கலந்துகொள்ளாத வகையில் படைப்புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை வவுணதீவு விளாவட்டவான், மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருந்த நிலையில் யுத்த காலம்போன்று பெருமளவிலான புலனாய்வாளர்கள் நிகழ்வு பிரதேசத்தினை சூழ்ந்திருந்ததன் காரணமாக அப்பிரதேசத்தில் பெரும் அச்சநிலையேற்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,மாகாண அமைச்சர் கி.துiராஜசிங்கம் ஆகியோர் கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment