ராஜபக்ச அரசாங்கத்தின் பதவி வகித்த சிலர் அடுத்த சில நாட்களில் நிதி
குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஆரம்பகட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நிதியைத் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் சொத்துக்களைக் களவாடிய எந்தவொரு நபரும் தராதரம் பாராது கைதுசெய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறான குற்றவாளிகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வரையில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டாம் எனவும் இவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
-srilankamirror-

No comments:
Post a Comment