ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்ளும் பொருட்டு தாயொருவர் தனது இரு குழந்தைகளுடன் சிரியா நோக்கி பயணமாகிய தகவல் வெளியாகியுள்ளது.ரியானா பேகம் இஸ்லாம் (33) என்ற குறித்த பெண் 8 வயதான மகன் மற்றும் 3 வயது மகளுடன் பிரித்தானியாவை விட்டுச் சென்றுள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லை நோக்கி கடந்த மாதம் 14 ஆம் திகதி பயணித்துள்ளார்.
அவருக்கி சிரிய நாட்டவரொருவர் உதவிசெய்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது கணவருக்கு தெரியாமலேயே வீட்டை விட்டு சென்றுள்ளார். குழந்தைகளுடன் ஏன் அவர் அங்கு சென்றார் எனவும் இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆட்களைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஐ.எஸ் இயக்கத்தில் இணையச் சென்றவர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment