ஜெர்மன் தமிழாலயத்தின் தந்தை, ஈழத்தமிழ்பெருமகன், தமிழ்ஏந்தல் பெருந்தமிழ் ஆசான், திரு. இரா.நாகலிஙகம் ஐயா அவர்களின் மறைவையொட்டி வேதனையுறும் உலகத்தமிழர்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம்.
புலம்பெயர் தேசமெங்கும் எமது மொழியும், எமது கலையும், எமது பண்பாடும், எமது வரலாறுமே எமது இனத்தைக் தாங்கி நிற்கும் என்பதை எமது எதிர்காலச் சந்ததிக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் எடுத்தியம்பிய பேராசனின் மறைவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
புலம்பெயர்தேசத்தில் தமிழை வளர்த்த அவரது நேர்த்தியான திட்டமிடல்கள், அவரது ஆளுமைகள், அவரது அருங்குணங்கள், அவரது வழிகாட்டல்கள், தமிழ்க்கல்விப்பணியில் உள்ள அனைவருக்கும் ஒரு முன்மாதிரி என்பதை அறிக்கையிடுகிறோம். நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.
அன்னாரது தமிழுணர்வும், நாட்டுப்பற்றும், அயராத உழைப்பும், எம்மவரால் மதிக்கப்படுவதுடன், அவரது உயர்பண்புகளும், ஆற்றல்களும், நாமும் பெற இப்பெருமகன் எம் இதயங்களில் தமிழ் ஆசானாக வீற்றிருக்க வேண்டுமென்று இறைவனிடம் இறைஞ்சி நிற்கிறோம்.
நெதர்லாந்து நெதர்லாந்து தமிழர் பேரவையும் நெதர்லாந்து வாழ் தமிழர்களும் அவரின் மறைவால் துயருறும் அன்னாரது குடும்பத்தினரின், பெருந்துயரில் பங்கெடுப்பதுடன், எமது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நெதர்லாந்து தமிழர் பேரவை
நெதர்லாந்து தமிழர் பேரவை
No comments:
Post a Comment