ஏழாலையில் உள்ள ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் நஞ்சு கலந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசாரால் கடந்த 23ம் திகதி கைதான பாடசாலைக் காவலாளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மயிலங்காட்டுப் பகுதியைச் சோ்ந்தவர் என தெரிவித்த பொலிசார் இவர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்ட காவலாளிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேவையேற்படின் அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment