March 25, 2015

பருத்தித்துறை நீதிமன்றில் சமுதாயசீர்திருத்த திணைக்களத்தின் அலுவலகம் திறப்பு!

சமுதாயம் சார் சீர்திருத்த  திணைக்களத்தின்  அலுவலகம், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை(25) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி டி.சி.சன்னசூரிய மற்றும் பருத்தித்தறை மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா ஆகியோர் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தேனர்.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் கடந்த 1 ½ வருடங்களாக சமுதாயம் சார் சீர்திருத்த பிரிவு இயங்கி வருகின்றபோதும் அதற்கான அலுவலகம் இல்லாத நிலை காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தால் கடந்த 2014ஆம் ஆண்டு 55 பேருக்கு சமுதாயம் சார் சீர்திருத்த பணி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

சிறுகுற்றங்கள் செய்பவர்கள் மீண்டும் அந்தக் குற்றங்களை செய்யாமல் இருப்பதற்கும், அவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கிலும் இந்த சமுதாயம் சார் சீர்திருத்த பணிகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

பொது இடங்களை துப்புரவு செய்தல், ஆன்மீகத்தில் ஈடுபடுத்துதல் தொழில்வாய்ப்பு ஒன்று தேடிக்கொள்ள ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த சமுதாயம் சார் சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment