பெட்ரோலியத்தில் காணப்படும் பிரதான சேதனப் பொருள் அல்கேன்ஸ் நிரம்பிய ஐதரோகாபன் மூலக்கூறுகள் நச்சுத்தன்மை வாய்ந்ததென அம்பலப்படுத்தியுள்ளார் மருத்துவ சங்கத் தலைவர் முரளி வல்லிபுரநாதன்.
உயர்தர இரசாயனவியல் படித்த மாணவர்களுக்கே இவை நச்சுத் தன்மை
வாய்ந்தது எனத் தெரிந்த ஒரு விடயம் ஆகும். ஏற்கெனவே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நூற்றுக்கணக்கான கிணறுகளில் ஆய்வு செய்தும் சுகாதார அமைச்சு 25 கிணறுகளில் எடுத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்கள ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்தும் பெற்றோலியக் கழிவுகள் நீரில் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தரம் வாய்ந்த ஆய்வுகூடங்கள் இருக்கத் தக்கதாக புறொக் (FROG) 4000 எனப்படும் தரம் குறைந்த, அல்கேன்ஸினைக்கூட கண்டு பிடிக்க முடியாத வெளிக்கள உபகரணத்தை கொண்டு பரிசோதனை செய்து "நிபுணர் " குழு ஆபத்தான பதார்த்தங்கள் இல்லை என்று ஊடகங்களில் விளம்பரம் செய்வதன் நோக்கம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் விவசாய சுற்றுச்சூழல் அமைச்சு என்பவை அவ்விடயத்தில் காட்டிவரும் அவசரம் மற்றும் நிழல் நடவடிக்கைகள் பலத்த சந்தேககங்களை எழுப்பியுள்ளதாக மக்கள் அமைப்புக்களும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இந்த விடயத்தில் பெரும் பித்தலாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது மனைவி பிள்ளைகளை இந்தியாவுக்கு அனுப்பி விட்டு இங்கிருந்து கொண்டு கிணற்று நீரால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொலை செய்யவும் தயங்காது உள்ளதாகவும் எங்களுக்கே விளங்காத மாதிரி ஏதோ மூலக்கூறுகளின் பெயர்களைச் சொல்லி அந்த மூலக்கூறு இல்லை... இந்த மூலக்கூறு இல்லை என்று மக்களை விசரர்களாக்க முயலும் கள்ள நிபுனர்கள் குழுவை ஐங்கரநேசனே ஒழுங்குபடுத்தி இவ்வாறு சொல்ல சொல்லியிருக்கின்றார்,
கண்களால் பார்க்கும் போதே கிணற்றில் எண்ணெய் இருக்கின்றது தெரிகின்றது. இதையே குடிக்க சொன்னால் எவ்வாறு குடிப்பது. ஐங்கரநேசன் ஒவ்வொருநாளும் இந்த குடிநீரைக் குடிப்பாரோ? மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்,
No comments:
Post a Comment