யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை 14ம் திகதி வருகை தரவுள்ள இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கடுமையான பாதுகாப்பபு நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டுள்ளன.
நீண்ட கால இடைவெளியின் பின்னர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் ஒவ்வொரு ஒழுங்கையிலும் இரண்டு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கும் மேலாக ஒவ்வொரு ஒழுங்கையிலும் பொலிசாரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளார்கள்.
இன்று மதியம் இராணுவத்தினர் தீடிரேன ஒழுங்கை முகப்புகளில் கொண்ட வந்து நிறுத்தப்பட்டமையால் பரவலாக கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பொது மக்கள் மத்தியில் சற்று பதட்டமான நிலமை ஏற்பட்ட போதிலும் சில நிமிடங்களில் நடப்பது என்ன வென்பதை உணர்ந்து பொது மக்கள் ஆறுதலடைந்தார்கள்.
இதேவேளை பொலிசாரும் இராணுவ உயர் அதிகாரிகளும் வாகனங்களில் ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.


No comments:
Post a Comment