March 13, 2015

பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு1

பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் 67 வருடமாக இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டியும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள (OISL) விசாரணைக்குழு தனது விசாரணையைஅறிக்கையை   காலதாமதம் இன்றி உடன் வெளியிட வேண்டும் எனக்கோரியும் , தமிழின அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுயுறுத்தியும், நேற்று புதன் கிழமை(10.03.2015) பிற்பகல் 3.45 மணியளவில் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனஈர்பு  போராட்டம்நடைபெற்றது.



இந்நிகழ்வை தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு.மு.க. சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள்கலந்துகொண்டு, மிகவும் எழுச்சியுடன் ஆரம்பமாகியிருந்தது.
இதே வேளை  ஐரோப்பிய நாடாளுமன்றில் தமிழ்ப்பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெற்றிருந்நது. இச் சந்திப்பின்போது ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தினரும், மற்றும் திரு. திரு.மு.க. சிவாஜிலிங்கம் ஐயா அவர்களும் மகஜர்களை சமர்ப்பித்திருந்தனர். திரு. சிவாஜிலிங்கம் ஐயா அவர்களுடைய மகஜரில் முக்கியமாக வடமாகாண சபையில் கடந்த 10.02.2015அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதே வேளை  ஐரோப்பிய நாடாளுமன்றிலும் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுப்பது அநீதி எனவும் சுட்டிக்காட்டப்பட்டு மகஜர் கையளிக்கப்பட்டது. ஆத்துடன்  ஐரோப்பிய நாடாளுமன்றில்  ஐந்துஅம்சக் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது. ஐகயளிக்கப்பட்ட ஐந்துஅம்சக் கோரிக்கைகளின் விபரம்

1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும்
தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வான தமிழீழத்தைப் பெற்றுத் தரக் கோரியும், கடும் மழை, குளிர் காற்றென்றும் பாராது 100க்கணக்கான மக்கள் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் நடாத்தியிருந்தனர்.

தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தாமும் பாடுவதாக உறுதி அளித்ததுடன் ஐரோப்பிய வாழ் அனைத்து தமிழ் மக்களும், தாம் வாழும் பகுதிகளில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி, தமிழரின் நிரந்தர தீர்வு தனித் தமிழீழம் என்பதை வலியுறுத்துமாறும் ஆலோசனை கூறியிருந்தனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.









No comments:

Post a Comment