உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்திருக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை கொழும்பு தாஜ் விடுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படுகின்ற போது வட கிழக்கு இணைப்பு என்பது ஒரு முக்கிய விடயம் முன்பு இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வட கிழக்கு இணைப்பு என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அந்த ஒப்பந்தம் இல்லாமல் செய்யப்பட்டது. வடகிழக்கு என்பது தமிழ் மக்களுடைய வரலாற்று பூர்வமான தாயகப்பிரதேசம் ஆகவே இனப்பிரச்சினை தீர்வுக்கு வடகிழக்கு இணைப்பு என்பது முக்கியமாகும் என்பதையும், மக்கள் முளுமையாக குடியேற்றப்பட வேண்டும் ஒரு சொற்ப அளவிலேயே மக்கள் மீள் குடியேற்றப் பட்டுள்ளனர் இன்று தான் அதுவும் தொடங்கப்பட்டுள்ளது மிகுதி எப்போது நடக்கும் என்பது தெரியாது என்பன போன்ற கருத்துக்களை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எடுத்து விளக்கினோம். அதற்கு அவர் இன்று தாம் இலங்கை ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அவர் காணி மற்றும் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான கருத்துக்களை கொண்டிருக்கிறார். அவர் எனக்கு உறுதியளித்ததாக நான் சொல்ல மாட்டேன் ஆனால் இவை தொடரபில் ஜனாதிபதி ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்.
இது ஒரு புதிய அரசாங்கம் ஆகவே நீங்கள் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பொறுமை தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் ஏனைய அரசாங்கங்களேடு அணுகியதைப் போல இந்த அரசாங்கத்தோடு அணுகக்கூடாது ஏனெனில் இது ஒரு புதிய அரசாங்கம் பல மாற்றமான கருத்துக்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மூலோபாயக் குழு இவை தொடர்பில் விரிவாக ஆலோசித்து புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசவேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும். ''இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே' அதற்கு நாம் ஆம் என பதில் கொடுத்தோம். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செயற்பட வேண்டும் போன்ற விடயங்களை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் குறிப்பிட்டார.; இன்றைய சந்திப்புத் தொடரபில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிடுகையில் இன்றைய சந்திப்பு என்பது மகவும் குறுகிய நேர சந்திப்பு. இந்தியப்பிரதமர் இலங்கையின் புதிய அரசு மீது நிறைவான நம்பிக்கை வைத்திருப்பதை எம்மால் உணரமுடிந்தது. இந்திய பிரதமர் இலங்கை அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக இலங்கை அரசு செயற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அத்துடன் இலங்கை அரசும் விரைவில் மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகி வருகின்றது ஆகவே அடுத்த தேர்தல் முடியும் வரையில் தமிழ் மக்கள் பொறுமைகாக்க வேண்டிய தேவையொன்று இருப்பதையே இந்தியத் தரப்பும் சுட்டிக்காட்டுகின்றது. அதற்கு முன்பாக ஏதும் நடக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்லை. என குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன்,சுமந்திரன் ஆகியோரும் இந்தியத் தரப்பில் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி,வெளிவிவகாரச் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment