யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதியில் செஞ்சிலுவை சங்கப்பிரதிநிதிகள் அகப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் தெரிய வந்துள்ளதாவது. இந்திய பிரதமரது பயணம் இடம்பெற உள்ள நிலையில், வீடமைப்பு திட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள செஞ்சிலுவை சங்கம் மீது,
சேறுபூசத்திட்டமிட்டு இந்நாடகம் அரங்கேற்றபட்டமை கண்டறியப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை செஞ்சிலுவைசங்கத்தில் முக்கிய பதவி வகித்து வந்த முன்னாள் படை அதிகாரியான கொஸ்வத்த, மஹிந்த ஆட்சிக்காலத்தில் செல்வாக்குடன் அசைக்க முடியாத அதிகாரியாக செயற்பட்டுவந்திருந்தார். பல ஊழல் மோசடிகளுடன் செயற்பட்டு வந்த அவர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். எனினும் கடந்த காலங்களினில் கிளிநொச்சியினில் பிரிகேடியர் தரத்தினில் பணியாற்றும் தனது சகோதரன் சகிதம் ஏனைய செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை அச்சுறுத்தியும் வந்துள்ளார்.
இந்நிலையினில் வீடு திரும்ப உள்ள நிலையினில் தனது சகபாடிகளிற்கு விருந்தளிக்க அழைத்திருந்ததாகவும் அவ்வாறு வந்தவர்களினையே ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த தென்னிலங்கை யுவதியொருவர் சகிதம் சிக்கவைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.அவர்கள் பயணித்த வாகனத்தை புகைப்படம் பிடித்து செஞ்சிலுவை சங்கம் மீது சேறு பூச வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த நபரான கொஸ்வத்த யாழ்.நகரினில் இரண்டு விடுதிகளை ஏற்கனவே நடத்திவருவதாகவும் தனக்குள்ள காவல்துறை ஆதரவை பயன்படுத்தி இத்தகைய நாடகத்தை அவர் அரங்கேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தை முன்னெடுக்கும் பிரதான பங்காளராக செஞ்சிலுவை சங்கமே இருந்துவருகின்றது. இந்நிலையினில் இந்திய பிரதமர் வருகை மற்றும் கட்டப்பட்ட வீடுகளை கையளித்தல் நிகழ்வுகளின் போது நெருக்கடிகளை தோற்றுவிக்கும் முயற்சிகளாக இது பார்க்கப்படுகின்றது.


No comments:
Post a Comment