சிறிலங்கா பேரினவாத அடக்குமுறைகளுக்குள் தொடர்ச்சியாக அவலவாழ்வை எதிர்நோக்கும் எம்முறவுகளின் வாழ்வில் எந்தமாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. பறிபோன தமிழர் நிலமும் காணாமல்போன உறவுகளின் கண்ணீரும் சிறையில் வாடும் எம்சொந்தங்களின் ஏக்கங்களும் இன்னும் ஒரு மாற்றத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை.
ஐநா விசாரணையாளர்களை அனுமதிக்கபோவதில்லை என்றும் சனல் 4 வெளியிட்ட நோ பயர் சோன் என்ற ஆவணப்படத்தையும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் இலண்டனில் இருந்து மைத்திரிபாலா அறிவிக்கின்றார்.
ஆண்டுக்கணக்கில் அடைத்துவைத்திருப்பவர்களை விடுவிக்குமாறு கோரினால் விபரங்களை திரட்டுகின்றோம் எனச்சொல்கின்றது சிறிலங்கா அரசு. மாற்றங்களை கொண்டுவரும் என மக்கள் நம்பி வாக்களித்தும் மீண்டும் ஏமாற்றமே வாழ்வாகிப்போகின்றது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையாவது உருப்படியான அறிக்கையை இம்மாதம் சமர்ப்பிக்கும் அதன்பிறகாவது ஏதாவது மாற்றங்கள் வரும் எனக்காத்திருந்த மக்களை இன்னும் காத்திருக்க சொல்கின்றனர்.
அன்பான உறவுகளே,
சர்வதேச கவனம் திரும்பியுள்ள சூழலில் அதனை சரிவர பயன்படுத்தி எமது உறவுகளுக்கான சுதந்திரமான தீர்வினை பெற்றுக்கொள்ளாமல் போனால் எமது மக்களின் குரல்களுக்கான நியாயத்தை எப்போதுமே பெற்றுக்கொள்ளமுடியாமல் போய்விடும்.
இன்று தாயகம் எங்கும் உறவுகளைத்தேடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்கள் உறவுகளைத்தேடி அவர்கள் எழுப்பும் குரல்களோடு எமது கரங்களையும இறுகப்பற்றிக்கொண்டு தமிழின அழிப்புக்கு நீதிகோருவோம்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நீதிக்கான பேரணி பற்றிய விபரம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் இரண்டு இடங்களில் ஆரம்பமாகும் நீதிக்கான நடைபயணம் பிற்பகல் 3 மணியளவில் மெல்பேண் மத்தியில் உள்ள State Library முன்பாக நடைபெறும் நீதிக்கான பேரணியுடன் இணைந்துகொள்ளும்.
நடைபயணத்தில் இணைந்துகொள்பவர்கள் Glen Waverly என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கும் என்ற Sunshine இடத்தில் காலை 10.30 மணிக்கும் தமது நீதிக்கான நடைபயணத்தை ஆரம்பிப்பார்கள்.
நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டு மனிதவுரிமைவாதியும் பிரபல சட்டவாளருமான றொபேட் ஸ்ராறி மற்றும் தமிழ் அகதிகளுக்கான செயற்பாட்டாளர் றெவர் கிரான்ட் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
உலகம் பரந்துவாழும் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுநின்று எம்முறவுகளுக்கான நீதிக்கான குரலில் இணைந்துகொள்வோம்.
தமிழர் நீதிக்கான பேரணி மையத்தினால் நடைபெறும் இந்நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஆதரவுடன் நடைபெறுகின்றது.
தொடர்புகளுக்கு - 0410 197 814, 0433 002 619

No comments:
Post a Comment