February 9, 2015

வெலிக்கடை சிறை சென்றார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பார்வையிடவே ஜனாதிபதி இவ்வாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆவண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இரகசிய உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டதாக தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஊடகங்களுக்கும் திஸ்ஸ அத்தநாயக்க ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்.
இந்த ஆவணங்கள் போலியானவை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமர் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.


அதன் அடிப்படையில் போலி கையொப்பங்கள் இட்டு போலி ஆவணத்தை தயாரித்து மக்களை பிழையாக வழிநடத்தியதன் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திஸ்ஸ அத்தநாயக்கவின் நலன் விசாரிக்கச் சென்ற ஜனாதிபதி சிறிது நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையை விட்டு வெளியேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.X President 1

No comments:

Post a Comment