February 20, 2015

யாழ். சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!



வரும் நிலையில் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தின் முன்பாக குறித்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த தொண்டர்கள் 5 வருடம் தொடக்கம் 15 வருடங்கள் கடமையாற்றியிருக்கின்ற போதும் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையில் வறுமையுடன் வெறும் 6 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு சேவையாற்றி வருகின்றனர். குறித்த 6 ஆயிரம் ரூபா சம்பளமும் கடந்த வருட இறுதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரி கடந்த 3 தினங்களாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக குறித்த தொண்டர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் அவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆளுநருக்கு மகஜர் ஒன்றிணையும் கையளித்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்த தெரிவிக்கையில், 5 வருடங்கள் தொடக்கம் 15 வருடங்கள் வரையில் தாம் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் கீழ் பணியாற்றிய போதும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும். தமது சம்பளம் கடந்த வருடம் ஐப்பசி மாதம் தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தாம் வறுமையில் வாடுவதாகவும், தமது சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதுடைன் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment