தேவை ஏற்பட்டால் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்தத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம்
தேர்தல்களுக்கு ஆயத்தமான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது முதல் அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டம் குறித்தே கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாராளமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரதும் ஒத்துழபை;பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 நாள் திட்டத்தை முன்னெடுக்க பாராளுமன்றம் போதியளவு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்த அரசாங்கம் தயாங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment