February 1, 2015

சுமந்திரனிற்கு யாழினில் கௌரவம்! அவரே கேட்டுபெற்றதாக தகவல்!

காசு வாங்கி வழக்காடிய சட்டத்தரணி சுமந்திரனிற்கு தொழில்நுட்பக்கல்லூரியினில் கல்வி கற்ற வேலை அற்ற பட்டதாரிகள் இன்று கௌரவம் வழங்கியுள்ளனர். எனினும் சுமந்திரனின் அழைப்பின் பேரிலேயே கௌரவிப்பு நடத்தப்பட்டதாகவும் பெருமளவிலான வேலையற்ற பட்டதாரிகள் நிகழ்வினை புறக்கணித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சுமார் 400 வரையிலான தொழில்நுட்பக்கல்லூரியினில் கல்வி கற்ற பட்டதாரிகள் அரசினது ஆட்சேர்ப்பு திட்டத்தினில் இணைத்துக்கொள்ளப்படாது புறக்கணித்திருந்தனர்.இதனையடுத்து அவர்கள் ஒன்றிணைந்து தலா இரண்டாயிரம் கட்டணம் செலுத்தி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரனை அமர்த்தி வழக்காடி வென்றிருந்தனர்.அதில் சுமார் 4 இலட்சத்திற்கு கணக்கு சமர்ப்பித்த சுமந்திரன் மீதி பணத்திற்கு கணக்கு வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையினில் தற்போது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள சுமந்திரனின் வேண்டுகோளின் பேரினில் கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தினில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.எனினும் 70 பேர் வரையினில் மட்டுமே நிகழ்விற்கு வருகை தந்ததாக கூறப்படுகின்றது.

தேர்தல் வெற்றிக்காக தமிழ் அரசியல்வாதிகள் பலரும் முனைப்பு காட்டிவருகின்ற நிலையினில் இன்று சுமந்திரனும் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

No comments:

Post a Comment