August 23, 2014

இலங்கை பிரச்சினையைத் தீர்க்க தமிழகத் தலைவர்கள் மத்திய அரசுடன் இணைந்து குரல் கொடுக்கவேண்டும்!

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும் அனைவரும் இந்திய மத்திய
அரசுடன் சேர்ந்து ஒருமித்து குரல் கொடுத்தால் அது தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இந்திய அரசின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேசும் பொருட்டு இந்தியா சென்றுள்ள சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த அவர்,
தமிழக அரசும், அரசியல் தலைவர்களும், மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகின்றனர். அவர்களது செயற்பாடுகளை நாம் வரவேற்கிறோம்.
ஆனாலும் எல்லோரும் ஒருமித்து குரல் கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம்.
அதாவது தமிழகத் தலைவர்களும் இந்திய மத்திய அரசுடன் இணைந்து இலங்கைப் பிரச்சினைக்காகக் குரல்கொடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. – என்றார்.

No comments:

Post a Comment