August 23, 2014

சாட்சியமளிக்கும் பொதுமக்களை ஜ.நா பாதுகாப்பற்ற வேண்டும்! செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை  ஆணையாளரினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு முழமையான ஆதரவை வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அதே வேளை இந்த
விசாரணைகளின் போது சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பை ஆணையாளரே உறுதிப்படுத்தவேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்துள்ளது. விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென துணிந்து நின்று செயற்பட்ட மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மாற்றம் பெறவுள்ள நிலையில் அடுத்து வருகின்ற ஆணையாளரும் அவரைப் போன்றே செயற்படுவாரெனநம்புவதாகவும் கூட்டமைப்பின் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் சபையின் விசாரணைகள் மற்றும் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் மாற்றம் தொடர்பிலும் கருத்துவெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு  இருக்கின்றது. இந்த விசாரணைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் தடையாகவே இருந்துவருகின்றது.

இந்நிலையில் இதற்குசாட்சியங்களைவழங்கமக்கள் தயாராகவே இருக்கின்றனர். அத்தோடு இதற்குமுழுமையானஆதரவுகளையும் ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்கும் அதேவேளையில் இங்குசாட்சியமளிக்கின்ற மக்களின் பாதுகாப்புக்கள் வேண்டும். இதனைஐக்கியநாடுகள் சபையின் ஆணையாளரே உறுதிப்படுத்தவேண்டும்.

இவ்வாறு இங்கு  விசாரணைகள் நடைபெறவுள்ளன. இதற்காக துணிந்து நின்று செயற்பட்ட மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிலையில் அவரின் மாற்றம் எமக்கு கவலையை ஏற்படுத்திருப்பதுடன் அடுத்து வருகின்ற ஆணையாளர் தொடர்பில் பலத்தஎதிர்பார்ப்புஏற்பட்டிருக்கின்றது. அதாவது இங்குவிசாரணைகள் மேற்கொள்வதனைசகலவழிகளிலும் அரசாங்கம் தடுத்துவருகின்றதுடன் அடுத்துவருகின்ற ஆணையார் தொடர்பிலும் அதிக கவனமெடுத்துச் செயற்படுகின்றது. இதனை அரசாங்க  தரப்பினர்களே தற்போது வெளிப்படையாகப் பேசிவருகின்றனர்.

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு சொத்துக்கள் உடமைகைள் உறவுகள் எல்லாவற்றையும் இழந்து பல அழிவுகளின் மத்தியிலும் தமக்கான நீதி வேண்டியே ஐக்கியநாடுகள் சபையினைநம்பியிருக்கின்றனர். ஆகவே இதனூடாகதமிழ் மக்களுக்குநீதிநியாயம் கிடைக்கவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment