August 23, 2014

இலங்கையர்கள் ஒன்பது பேர் இந்தியாவில் கைது!

அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல உதவியதாக, மேலும் ஒரு இலங்கை அகதியை ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்தனர். தமிழகத்தில் பல்வேறு
அகதிகள் முகாம்களில் இருந்து தப்பிய சிவகுமார் (33), காலிஸ்டர் (32), ஜீவராஜ் (29), மேசகாந்தன் (28), ராஜேந்திரன் (40), ரமசூன் அலிப்கான் (26) உட்பட 9 பேரை இராமநாதபுரம் ´கியூ´ பிரிவு பொலிசார் ஓரியூர் புனித அருளானந்தர் கோயில் அருகே தங்கியிருந்த போது ஆகஸ்ட் 11ல் கைது செய்தனர். விசாரணையில் அனைவரும் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதற்கு இலங்கையின் முல்லைத்தீவைச் சேர்ந்த டேனியல் என்பவர் உதவி செய்ததாகவும் தெரியவந்தது.
இதேவேளை சில நாட்களுக்கு முன்பு கும்மிடிபூண்டி அகதிகள் முகாமிலிருந்து தப்பி செல்ல முயன்ற இவரை கன்னியாகுமரி ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.
இராமநாதபுரம் ´கியூ´ பிரிவு பொலிசார் இவரை பொலிஸ் ´கஸ்டடி´யில் எடுத்து விசாரித்ததில் மற்ற அகதிகளுக்கு உதவி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு திருவாடானை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் இளவரசி முன்னிலையில் ஆஜர்படுத்தி, மீண்டும் கன்னியாகுமரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment