தெற்கில் பெய்த அடை மழை மற்றும் மண்சரிவுகாரணமாகமாக 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில்
தஞ்சமடைந்துள்ளனர்.
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அடை மழையினால் 16 பேர் உயிரிழந்ததுடன் 4820 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த சீரற்ற காலநிலையினால் களுத்துறை மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், அவிசாவளையில் மூவரும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒருவருமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடைமழையினால் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கள் யாவும் ஸ்தம்பிதமடைந்ததுடன் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களினது இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அலுவலர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் உரிய நேரத்திற்கு தமது அலுவலகத்தையோ அல்லது பாடசாலையையோ சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பிட்ட பகுதிகளில் மக்களின் இயல்ப வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் மக்களின் இயல்ப வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment