இன்றைய கால கட்டத்தில் தொழிநுட்ப விருத்தியின் பயனாக நமக்குக் கிடைக்கும் நன்மைகளை விட நம்மை அச்சத்திற்குள்ளாக்கும் தீமையான
விடயங்களே அதிகளவில் நடந்தேறுகின்றன. ஆரம்ப காலத்தில் முகநுலில் தரவேற்றப்பட்ட புகைப்படங்கள், கருத்துக்கள் தரமற்றதன் விளைவாகவே, இன்று தொழிநுட்ப விருத்தியின் பயனாக இளம் தலைமுறையினர் இவ்வாறான தரம் கெட்ட நிலைக்கு செல்லுகின்றனர். இன்று இளைஞர் யுவதிகள் மொபைல் போன்கள், சிறிய ரக புகைப்பட கருவிகளின் உதவியுடன் இவ்விழிவான புகைப்படங்களை எடுத்து சமூக இணையத் தளங்ககளினூடாக வெளியிடுகின்றனர். இவ்வாறன செயற்பாடுகளின் எதிர்கால விளைவுகளை சிந்தித்து செயற்படாத இவர்களை சரியான திசைக்கு இட்டுச்செல்ல பெரியவர்கள் முன்வர வேண்டுமே தவிர, அவர்களும் இவ்வாறான செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் நடக்க கூடாது. புதிதாக அறிமுகமான சுற்றுலா தளங்கள், அந்நிய கலாச்சார வருகை அதிகரித்திருக்கும் காரணத்தினால் தான் இளம் தலைமுறையினரிடையே கலாசார சீர்கேடுகளும், அருவருக்கத்தக்க செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாக பொதுவாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்துறைக்கென வெளிநாட்டவர்களால் இயக்கப்படும் சில இணைய சேவை மையங்கள் இன்னும் ஒருபடி மேலே போய், மாணவர்ககளை உள்வாங்கி, அவர்களை ஆபாச நடவடிகைகளுக்கு தூண்டவும் ஆண், பெண்கள் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கின்றன. புதிய சூழலில் ஏராளமான வசதிகளை அனுபவிக்கக் கிடைத்ததில் திளைத்திருக்கும் இளம் தலைமுறையினர், சில வேளைகளில் தன்னை மறந்து திசைமாறியிருந்தாலும், அதற்கு அவர்கள் காரணம் என்பதை விட, எமது பிரதேசத்தில் உருவாகியுள்ள இருண்ட சூழ்நிலைகள் தான் பிரதான காரணம் எனலாம். திடீரென தமக்குத் கிடைத்திருக்கும் பல்வேறுபட்ட வாய்ப்புக்களையும் அனுபவிக்கத் துடிக்கும் இவர்களை கலாசார சீர்கேட்டின் அடையாளங்களாகக் கூறி விடுவது எந்தளவுக்கு நியாயம்? சுலபமாகச் சீரழிந்து போகும் அளவுக்கு கற்பிட்டி கலாசாரம் அவ்வளவு பலவீனமான ஒன்றா? இந்தக் கேள்விகள் மனதைக் குடைய, துறைசார்ந்த நிபுணர்கள் சிலரிடம் இதுபற்றிக் கேட்டறிந்த போது. அவர்கள் கூறுகையில்: “இளைஞர்கள் அப்படியொன்றும் கெட்டுப் போய்விடவில்லை. அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லுவதை விட, உண்மையில் அவர்களை வழிநடத்துபவர்கள் தான் குற்றவாளிகளாவார்கள்.” “இன்று இங்கே கிடைக்கும் பலவும் நமது இளைஞர்களுக்குப் புதியவை.பெரியவர்கள் நாளாந்தம் காட்டிக்கொடுக்கும் விடயங்கள் இளைஞர்களை ஈர்க்கக் கூடிய வகையிலுள்ள போது அதை அவர்கள் செய்ய முயல்கிறார்கள்” என்கின்றார். மதுவுக்கும், ஏனைய போதை பொருட்களுக்கும் அடிமையாவதும், பள்ளிபருவத்தில் வரும் காதல், இதனால் வரும் பிரச்சினைகள்? ஏன் இளைஞர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? என கேட்டோம். “பொதுவாகவே இளைஞர்களுக்கு அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பெரியவர்களுடான உள ரீதியான பேச்சுவார்த்தைகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில், தமது பிரச்சினைகள், சந்தேகங்களை இளைஞர்கள் பெரியவர்களிடம் சொல்லவோ, கேட்கவோ தயங்குகிறார்கள். அது மட்டுமன்றி, பெரியவர்களும் முன்னெச்சரிக்கையாக எதையும் உணர்த்துவதில்லை. இந்த இடைவெளியே இளைஞர்கள் இவ்வாறு நடந்துகொள்ளக் காரணமாக அமைந்து விடுகிறது” ”இளைஞர்களுக்கு சமூக விழுமியக் கல்வி கற்பிக்கப்படாமை தான் இதற்கு காரணம், இளைஞர்களுக்கு சமூக பற்றிய அறிவை ஊட்டத் தவறுகிறார்கள்” பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய உறவு முறையையும் அவர் தெளிவாக விளக்கினார். 13 - 19 (teenage) வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பெற்றோரை சார்ந்து வாழ்பவர்கள். 13 - 19 வயதுக்கிடைப்பட்ட சுதந்திரமான வாழ்க்கையை விரும்பும் பிள்ளைகளுக்கு(Independent Children) பெற்றோர் அளவுக்கதிமான கண்டிப்பு, விமர்சனங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைத் திணிக்கும் போது பிள்ளைகள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஒரு சிலர் முறை தவறவும் கூடும். அடுத்த படியாக 20-25 வயது. இது இன்னொருவருடன் தங்கி வாழப் பழகும் ((Inter Dependent) பருவமாக இருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் இன்னொருவருடன் சார்ந்திருக்க விழைவர். இங்கும் சரியான புரிந்துணர்வு மற்றும் தன்னிச்சையான முடிவுகளுக்கு இடமளிக்கப்படும் பட்சத்தில் தவறான செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. எல்லா விடயங்களிலும் தலையிடுதல், விமர்சிப்பு, கண்டனங்கள், குறைகளை பெரிதளவில் வெளிப்படுத்தல் போன்ற அணுகுமுறைகளைப் பெற்றோர் கடைப்பிடித்தால் நிலைமை மோசமடையும். இதன் போது, பெற்றோர் மறைமுகமாக பிள்ளைகளின் முடிவுகளுக்குத் தடையாக நிற்கின்றனர். இதனால், ‘செய்யலாமா? கூடாதா?’ என்ற குழப்பம் மற்றும் கேட்பதில் தயக்கம் என்பவற்றால் வழிமாறுகிறார்கள். சமூக நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளும் சரியான வாழ்வியல் பற்றிய விடயங்களை, சமூக விழுமியங்களை, பிள்ளைகளுக்கக் கற்றுக் கொடுக்கத் தவறுவதாலும் இத்தகைய பிரச்சினைகள் எழுகின்றன இதனை சமூகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுகின்றார். சரி, தம் மீதான இத்தகைய குற்றச்சாட்டுக்கள் குறித்து இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம் பெற்றோரின் தேவைகள் என்ன? அவர்கள் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்? என்பவற்றை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர்கள் சொல்லும் விடயங்களைச் செவிமடுத்தல், எந்த ஒரு புதிய விடயத்தையும் பெரியவர்களுடன் நட்புடன் கேட்டு விளக்கம் பெறல் என்பன அவசியமாகும். வீட்டுக்கு மறைத்துச் செய்ய முயலும் விடயங்கள் பற்றி அவற்றைச் செய்ய முன்னரே, அதனால் ஏற்படக்கூடிய பின விளைவுகளை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விடயங்களை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை, பெற்றோர் பிள்ளைகளைப் புரிந்து நடப்பவர்களாக இருப்பதுடன் கவனிப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். பாடசாலைகளில் மாணவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்குதல், இனப் பெருக்க சுகாதாரம் பற்றிய விளக்கத்தை அவர்களுக்குத் தெளிவுபடுத்துதல் என்பனவும் அவசியமாகும் என்கிறார் அவர். இதற்காகச் சட்டத்தில் கூட சிறு மாற்றம் ஏற்படின் அது பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. குறிப்பாக, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறு பிள்ளைகள் கருக்கலைப்புச் செய்ய அனுமதிப்பதுடன், புறம்பாக மனமொத்து முறையற்ற கர்ப்பமாகும் பிள்ளைகளுக்கு இது பொருந்தாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என்கிறார்அவர். நிலைமையைச் சீராக்க பெற்றோரும், பிள்ளைகளும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பின்வருமாறு விளக்குகிறார் பெற்றோர் பிள்ளைகள் மேல் நம்பிக்கையுடன் அன்பு (Authoritative & love) காட்டி வளர்க்க வேண்டும். இது கடினமானதெனினும் இதுவே சரியான வளர்ப்பு முறையாகும். பிள்ளைகளுடைய தலைமைத்துவப் பண்பை வளர்த்து, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் அவர்களுடைய கடமை -பொறுப்புகளை உணர்த்த வேண்டும். என்று கூறும் அவர், பாலியல் கல்வியை விரசத்தோடு பார்க்காது, அறிவு புகட்ட வேண்டும் எனச் சொன்னார். இவற்றைச் சமுதாயம் உறுதிப்படுத்துமானால், இளைஞர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நீங்க வழியேற்படும். நிலைமையைச் சீர்செய்யாமல் மேலெழுந்தவாரியாக இளைஞர்களைக் குற்றஞ்சாட்டுபவர்கள், தாமே இளைஞர்களின் இந்த நிலைமைக்குக் காரணமாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் அவர். (Dependent Children) அடிப்படை சமூக விழுமியக் கல்வியுடன், தமது முழுக் கட்டுப்பாடுகளையும் பெற்றோர் கொடுக்க முடியும். காலத்துக்குப் பின்னர் தளர்வான சூழலில் பலவித வசதிகளை அறிமுகப்படுத்தும் போது அது பற்றிய நன்மை தீமைகளை எடுத்துரைப்பார் யாருமில்லை. இதனால், எதையும் பரிச்சயப்படுத்திப் பார்க்கும் வயதுடைய இளைஞர்கள், இன்றைய சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதனாலும், அவர்களின் உணர்வுகளை கையாளப் போதியளவு அறிவு இல்லாமையினாலும் சில முரண்பாடான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்” என்று மேலும் விளக்கினார். இத்தகைய பல விதமான குற்றச்சாட்டுக்கள் அண்மைக்காலமாக உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

No comments:
Post a Comment