முல்லைத்தீவில் கணினி விற்பனை நிலையத்தில் வெடிப்பு சம்பவம். கடை முற்றாக சேதம்.
முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் கணினி விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அங்கு தங்கியிருந்த ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கடையில் பணியாற்றும் இ.நிதர்சன் (வயது 24) என்பவர் காலில் எரிகாயங்களுடன் முள்ளியவளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது – முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரிக்கு அருகில் குறித்த கணினி, இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையம் உள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தக் கடையில் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அதன் பின்னர் கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது கடைக்குள் பணியாளர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
இவரே எரிகாயங்களுக்கு இலக்காகியுள்ளார். உடனடியாக அயலில் இருந்தவர்கள் கூடி தீயை அணைக்க முற்பட்டபோதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த பொலிஸார் தண்ணீர் பவுஸரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். எனினும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. கடை முற்றிலுமாக எரிந்துபோனது. சம்பவத்துக்கு முன்னர் கடையில் வெடிப்பு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் காயமடைந்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடை எவ்வாறு தீப்பிடித்தது, மற்றும் சேத விவரங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை

No comments:
Post a Comment