இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு ஆள்களை சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தநிலையிலேயே
இராணுவத்தினர் குடும்பங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமங்களிலுள்ள சகல வீடுகளுக்கும் செல்லும் இராணுவத்தினர் அங்குள்ள மக்களிடம் பல்வேறு கேள்விகளைக் கொடுத்து அவற்றுக்கான பதில்களைப் பெற்று பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக இராணுவத்தினர் குடும்பப்பதிவுகளை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திற்கு பெண்களை இணைக்கும் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் எண்ணிக்கை தடுப்பிலிருந்து வந்தவர்கள் உள்ளனரா? குடும்பத்தில் தற்போதுள்ள உள்ளவர்கள் என்ன செய்கின்றனர்? வேறு மாவட்டங்களுக்குச் சென்று வசிப்பவர்களாயின் அவர்கள் எங்கு சென்று வசிக்கின்றனர் போன்ற பல்வேறு விவரங்களை இராணுவத்தினர் பதிவு செய்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே 57 வரையிலான கேள்விகள் அடங்கிய கேள்வி கொத்துடன் யாழ்ப்பாணத்திலும் இத்தகைய பதிவுகளை படையினர் முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment