மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று இன்று வியாழக்கிழமை (01.09.2016) மாலை மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் (அமதி) அடிகளார் எழுதிய (ஓர் வாழும் நாயகன்) என்ற பெயரைக் கொண்ட குறித்த ஆங்கில நூலானது மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் எழுதிய சில ஆவணங்களினதும் அவரைப்பற்றி எழுதப்பட்ட சில ஆவணங்களினதும் தொகுப்பாக அமைந்துள்ளது.
மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் குறித்த நூல் வெளியீடு விழா இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார்.
இவ்விழாவுக்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை கலந்துகொண்டார்.
மேலும் மன்னார் மறைமாவட்டத்தின் நான்கு மறைக்கோட்ட முதல்வர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
சர்வமதத் தலைவர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
-இதன் போது குறித்த நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளார் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு வழங்கி வைத்தார்.
இரண்டாவது பிரதியை நூலாசிரியர் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கு வழங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை சிறப்பு பிரதிகளை விருந்தினர்களுக்கு வழங்கி வைத்தார்.
இறுதியில் நூலாசிரியர் அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளாருக்கு மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நூல் வெளியீட்டு விழாவில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் திணைக்கள அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment