அநுராதபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கு நிதி சேகரிப்பதாக கூறி வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நிதி சேகரிப்பு என்ற போர்வையில் 24 வீடுகளில் திருடியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நிதி சேகரிப்பிற்காக போலி ஆவணங்களையும் சந்தேகநபர்கள் தயாரித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நாடளாவிய ரீதியில் இவ்வாறு நிதி சேகரிப்பதாக கூறி திருட்டுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்து பகல் நேரங்களிலே இவர்கள் திருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment